கனடா மீதான வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு ஆபத்து: ட்ரூடோ சொல்வது என்ன?


“கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு என்பது அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்று ட்ரம்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப் பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவுக்கு பொற்காலத்தை கொண்டு வர விரும்பினால், கனடாவுடன் கூட்டு சேர்வதே அதற்கு சிறந்த வழி. மாறாக, எங்களை தண்டிப்பது இல்ல. நாங்கள் எதனையும் அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால், கனடாவுக்காக, கனடா மக்களுக்காக, கனடா மக்களின் வேலைவாய்ப்புகளுக்காக போராடுவோம்.

கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு என்பது அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தும். அமெரிக்க வாகனங்கள் உருவாக்கும் ஆலைகள் மற்றும் பிற உற்பத்தி வசதிகளை மூடுவதற்கு வழி வகுக்கும். அவை மளிகைக் கடையில் உங்களின் உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயுக்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும்” என்றார்.

x