நாளை ஜன.1 முதல் ரஷ்யா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!


உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வரும் நிலையில், நல்ல செய்தியாக நாளை ஜனவரி 1, 2025 முதல் ரஷ்யாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் படி ஆகஸ்ட் 2023ம் ஆண்டு முதல் இந்தியர்களை இ-விசாக்கள் மூலம் ரஷ்யா அனுமதித்து வருகிறது. இந்த விசா முறை 4 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு இ-விசா மூலம் பயணம் செய்ய ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது சீனா மற்றும் ஈரான் நாட்டினரை விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அனுமதித்து வருகிறது. இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை இந்தியாவுக்கும் விரிவுப்படுத்த ரஷ்யா முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x