கஜகஸ்தான்: அக்டாவ் நகரில் அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை டெலி கிராம் அறிக்கையில் ஐந்து பணியாளர்கள் உட்பட 67 பேர் விமானத்தில் இருந்ததை அமைச்சகம் உறுதிப் படுத்தியது. ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ், மேலும் உயிர் பிழைத்தவர்கள் இருக்கலாம் என்று அமைச்சகத்தை மேற்கோள்காட்டியது.
இது தொடர்பாக கஜகஸ்தான் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பாகு-க்ரோஸ்னி வழித்தடத்தில் செல்லும் விமானம் அக்டாவ் நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது. இது அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது அக்டோவில் இருந்து மூன்று கிலோ மீட்டர் (1.9 மைல்) தொலைவில் விமானம் "அவசர தரையிறக்கம்" செய்யப்பட்டது.
எம்ப்ரேயர் 190 ரக விமானத்தில் 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்ததாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் 37 பேர் அஜர்பைஜானைச் சேர்ந்தவர்கள், 6 பேர் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் 16 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளது.
கஜகஸ்தானின் அவசர கால அமைச்சகம் முதலில் விபத்தில் 25 பேர் உயிர் பிழைத்ததாகக் கூறியது, பின்னர் அந்த எண்ணிக்கையை 27 ஆகவும் பின்னர் 28 ஆகவும் மாற்றியமைத்தது, விபத்து நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக நடந்ததால், இறப்பு எண்ணிக்கை குறைந்தது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவர்களுடன் கசாக் தலை நகர் அஸ்தானாவில் இருந்து சிறப்பு விமானம் அனுப்பப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது