அதிர்ச்சி வீடியோ: மெக்ஸிகோவில் நடுவானில் விமானத்தை கடத்த முயன்ற பயணி 


மெக்ஸிகோவில் நடுவானில் எல் பாஜியோவிலிருந்து டிஜுவானாவுக்கு பறந்துக் கொண்டிருந்த வொலாரிஸ் 3401 விமானத்தை திடீரென பயணி ஒருவர், அமெரிக்காவிற்கு பறக்கக் கோரி கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணியின் கடத்தல் முயற்சியைத் தொடர்ந்து விமானம் குவாடலஜாராவிற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு அதிகாரிகள் அந்த நபரை தடுத்து வைத்தனர்.

எல் பாஜியோவில் இருந்து டிஜுவானா செல்லும் மெக்சிகோ உள்நாட்டு விமானத்தை, பயணி ஒருவர் கடத்தி அமெரிக்காவிற்கு பயணிக்க வற்புறுத்த முயன்றதால் விமானம் திருப்பி விடப்பட்டது. பயணிகள் வோலாரிஸ் 3401யை மத்திய மெக்ஸிகோவில் உள்ள குவாடலஜாராவுக்குத் திருப்பியதாக விமான நிறுவனம் கூறியது. விமானத்தின் உள்ளே நேரில் பார்த்த பயணி ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட வீடியோ, பயணிகளை ஊழியர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சியான தருணத்தைக் வெளிப்படுத்தியது.

பயணிகளை பணியாளர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அந்த நபரை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பிறகு, வோலாரிஸ் 3401 விமானம் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள டிஜுவானாவுக்குச் செல்லும் வழியில் தொடர்ந்தது.

"அனைத்து பயணிகள், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டு, அவர்களது இறுதி இலக்கை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்" என்று வோலாரிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வோலாரிஸின் தலைமை நிர்வாக அதிகாரி என்ரிக் பெல்ட்ரானெனாவும் இது குறித்த அறிக்கையில், “எல் பாஜியோ - டிஜுவானா வழியை உள்ளடக்கிய வோலாரிஸ் விமானம் 3041ல் இன்று நாங்கள் ஒரு விதிவிலக்கான சூழ்நிலையை எதிர்கொண்டோம். ஒரு பயணி விமானத்தை அமெரிக்காவிற்கு திருப்பி விடக் கோரி முயன்றார்” என்று தெரிவித்துள்ளார்.

x