அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்குநராக காஷ்யப் படேல் நியமனம் - யார் இவர்?


வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்​பின் (எஃப்​பிஐ) இயக்​குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் படேலை, அதிபராக பதவி​யேற்க உள்ள ட்ரம்ப் நியமித்​துள்ளார்.

அமெரிக்​கா​வின் புதிய அதிபராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள டொனால்டு ட்ரம்ப் வரும் ஜனவரி​யில் பதவி​யேற்க உள்ளார். இந்த நிலை​யில், புதிய அமைச்​சர்​கள், முக்கிய அமைப்பு​களின் இயக்​குநர்களை அவர் இப்போதே நியமனம் செய்து வருகிறார்.

இந்த வரிசை​யில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்​குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் படேலை ட்ரம்ப் நியமித்​துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் நேற்று வெளி​யிட்ட அறிவிப்​பில் கூறி​யுள்ள​தாவது: எஃப்பிஐ அமைப்​பின் அடுத்த இயக்​குநராக காஷ்யப் படேல் பணியாற்று​வார். அவர் சிறந்த வழக்​கறிஞர், புலனாய்வு துறை நிபுணர். அமெரிக்கா​வுக்கு முதலிடம் அளிக்​கும் போராளி. ஊழல் விவகாரங்களை வெளிக்​கொண்டுவர வாழ்​நாள் முழு​வ
தும் போராடி வருகிறார். அமெரிக்க மக்களின் நீதியை நிலைநாட்ட உறுதி​யுடன் செயல்​படு​கிறார். ரஷ்யா​வின் சதிகளை அம்பலப்​படுத்தி, அமெரிக்​கா​வின் நலன்களை காத்​துள்ளார்.

அவர் பதவி​யேற்​றதும், அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக குடியேறிய கும்​பல்​களின்சமூக​விரோத செயல்​கள், எல்லை​யில் நடைபெறும் ஆள்கடத்தல் ஆகிய​வற்றை தடுக்க எஃப்பிஐ முழு​வீச்​சில் பணியாற்றும். இவ்வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்ளார்.

காஷ்யப் படேல், இந்திய வம்சாவளியை சேர்ந்​தவர். இவரது முன்னோர், குஜராத் மாநிலம் வடோதரா பகுதியை சேர்ந்தவர்கள். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் கடந்த 1980 பிப்​ர​வரி​யில் காஷ்யப் படேல் பிறந்​தார். அரசு வழக்​கறிஞராக பணியை தொடங்​கிய​வர், நீதித் துறை அட்டர்னி, அமெரிக்க அரசின் தீவிரவாத தடுப்பு பிரிவு மூத்த ஆலோசகர், தேசிய பாது​காப்பு கவுன்​சில் உறுப்​பினர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்​தார்.

தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டன் பைடன் தொடர்பான பல்வேறு ரகசி​யங்களை இவர் அம்பலப்​படுத்​தி​ய​தால், ஜனநாயக கட்சி தலைவர்​கள், இவர் மீது கடும் அதிருப்தி அடைந்​தனர். அவர்​களது எதிர்ப்​பால், அரசு பொறுப்பு​களில் இருந்து விலகினார். எஃப்பிஐ இயக்​குநராக கடந்த 2017-ல் ட்ரம்​பால் நியமிக்​கப்​பட்ட கிறிஸ்​டோபரின் பதவிக் காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ளது. இந்த நிலை​யில், புதிய இயக்​குராக காஷ்யப் படேலை ட்ரம்ப் நியமித்​துள்ள​தால், கிறிஸ்​டோபர் ​விரை​வில் ராஜினாமா செய்​வார் என தெரி​கிறது. ட்​ரம்​புக்காக எதை​யும் செய்​யக்​கூடிய​வர் ​காஷ்யப் என்று அமெரிக்க ஊடகங்​கள் பு​கழாரம்​ சூட்​டுகின்​றன.

x