பாகிஸ்தானில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலி


பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று குண்டுவெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில், பெஷாவர் செல்லும் நடைமேடையில் இருந்து ஒரு ரயில் புறப்பட தயாராக இருந்தது.

இதுகுறித்துப் பேசிய குவெட்டாவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் முகமது பலோச், “பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து காரிஸன் நகரமான ராவல்பிண்டிக்கு பயணிக்க ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தபோது வெடிகுண்டு வெடித்தபலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து காரிஸன் நகரமான ராவல்பிண்டிக்கு பயணிக்க ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தபோது வெடிகுண்டு வெடித்தது.

இந்த சம்பவம் தற்கொலை குண்டுவெடிப்பாகத் தெரிகிறது.ஆனால் அதை உறுதி செய்யவில்லை. குண்டுவெடிப்பின் தன்மையைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

பலுசிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிந்த், சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சென்றடைந்ததாகக் கூறினார்.

வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவினர் அந்த இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதால், வெடிப்பின் தன்மை குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஷாஹித் ரிந்த் கூறினார். காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

x