அமெரிக்காவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய டொனால்ட் ட்ரம்ப்: கமலா ஹாரிஸுக்கு ஷாக்!


நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தற்போதைய டிரம்ப் இப்போது 270 வாக்காளர் குழு இடங்களை வென்றுள்ளார். கமலா ஹாரிஸ் 214 வாக்காளர் குழு இடங்களைப் வென்றுள்ளார். அமெரிக்க தேர்தலில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பதை ஏழு முக்கிய போர்க்கள மாநிலங்கள் தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு ஆறு மணி நேரத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஏற்கெனவே ஜார்ஜியா மற்றும் வட கரோலினா ஆகிய ஸ்விங் மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார் மற்றும் பென்சில்வேனியா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் நெவாடா ஆகிய 5 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளார்.

ஹாரிஸ் பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் முன்னணி பெற்று சிறப்பாகத் தொடங்கினார், ஆனால் ட்ரம்ப் அவரை முந்திக்கொண்டு முன்னிலையில் உள்ளார். ஸ்விங் மாநிலங்களில் அதிகபட்ச வாக்காளர் குழுக்களை கொண்ட பென்சில்வேனியாவில், 93 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு, அதில் ட்ரம்ப் ஹாரிஸை விட 3 சதவீத புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். அவர் விஸ்கான்சின், நெவாடா மற்றும் மிச்சிகன் ஆகிய இடங்களில் வலுவான முன்னிலை பெற்றுள்ளார்.

இறுதியில் ட்ரம்ப் இந்த ஏழு ஸ்விங் இடங்களையும் வெல்ல முடிந்தால் அது அவருக்கு மாபெரும் வெற்றியாகும். ஏனெனில் ஜனநாயகக் கட்சி கடந்த முறை இவற்றில் ஆறில் வெற்றி பெற்றது.

நெப்ராஸ்கா, நார்த் டகோடா, சவுத் டகோடா, லூசியானா, வயோமிங், இண்டியானா, கெண்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, டெக்சாஸ், ஓஹியோ, ஃப்ளோரிடா உள்ளிட்ட 24 மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், ரோட்ஸ் ஐலாண்ட், கனெடிகட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு இதுவரை 270 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 214 குழுக்களின் ஆதரவை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, ட்ரம்ப் 247, கமலா ஹாரிஸ் 214 என்ற எண்ணிக்கையை வசப்படுத்தி உள்ளனர்.

ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

x