‘சாப்ஸ்டிக்ஸ்’ தொழில்நுட்பம் மூலம் ஸ்டார்ஷிப் விண்கல பூஸ்டரை வெற்றிகரமாக மீட்டது ‘ஸ்பேஸ் எக்ஸ்’


டெக்சாஸ்: விண்வெளி ஆய்வுக்காக வீரர்கள் மற்றும் சரக்குகளை அனுப்பும் ‘ஸ்டார்ஷிப்’ என்ற விண்கலத்தின் பரிசோதனையை அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ் நகரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 13-ம் தேதி மேற்கொண்டது.

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் முன்பகுதி பூமியின் சுற்றுவட்டபாதையில் சுற்றியபின் மீண்டும் கடலில் விழும் வகையிலும், அதன் பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமி திரும்பி ஏவுதளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சாப்ஸ்டிக்ஸ்’ ஸ்டாண்டில் மீண்டும் வந்து நிற்கும்படியும் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்டார்ஷிப் விண்கலம் கடந்த 13-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியபின் அதன் பூஸ்டர் ராக்கெட், ஏவுதளத்தில் புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாப்ஸ்டிக்ஸ் எனப்படும் ஸ்டாண்டில் வந்து நின்றது. இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறுகையில், ‘‘பூஸ்டர் ராக்கெட்டை மீண்டும் மீட்டது முக்கியமான சாதனை. இது விண்வெளி பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும். விண்வெளி திட்டங்களுக்கான செலவை குறைக்கும்’’ என்றார். விண்வெளி தொழில்நுட்பத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ந்து புதுப்பித்து கொண்டே இருக்கிறது

x