ஜப்பானின், அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வரும் இயக்கமான நிஹான் ஹிடாங்கியோ (Nihon Hidankyo) என்ற அமைப்புக்கு இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டில் இருந்து தப்பி உயிர்பிழைத்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் இந்த அமைப்பு, தொடர்ந்து உலகம் முழுவதும் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வருகிறது.
அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதற்காக இந்த இயக்கத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.