அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு


ஸ்டாக்ஹோம்: மறைந்த சுவீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, கடந்த 1901-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்கிறது. இதர 5 பிரிவுகளின் நோபல் பரிசுக்கு உரியவர்களை ராயல் சுவீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் தேர்வு செய்கிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, அக்டோபர் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.முதல்கட்டமாக மருத்துவத்துக் கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞா னிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரிருவ்குன் ஆகியோருக்கு மருத் துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நோபல் கமிட்டி செயலாளர் தாமஸ், சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மனித உடல் கோடான கோடிடிஎன்ஏ, ஆர்என்ஏ செல்களால் ஆனது. கடந்த 1993-ம் ஆண்டில் மைக்ரோ ஆர்என்ஏ செல்களை அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர்ஆம்ரோஸ், கேரி ருவ்குன் கண்டுபிடித்தனர். மைக்ரோ ஆர்என்ஏ-ல்ஏற்படும் அசாதாரண மாற்றங்களால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த செல்களில் ஏற்படும் மாற்றங்களால் செவித்திறன், கண் பார்வை, உடல் அமைப்பிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இதற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு நோபல் கமிட்டி செயலாளர் தாமஸ் தெரிவித்தார்.

விக்டர் ஆம்ரோஸ்: இவர், தற்போது மாசுசூசெட் ஸின் வொர்செஸ்டரில் உள்ள யுமாஸ் சான் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வருகி றார். உயிரியல் துறை தொடர்பான ஆராய்ச்சிக்காக இவர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

கேரி ருவ்குன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பெர்க்லி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் யூத குடும்பத்தில் கேரி ருவ்குன் பிறந்தார். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், அந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

எம்ஐடி கல்வி நிறுவனத்தில் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் இணைந்து பணியாற்றியபோது மைக்ரோ ஆர்என்ஏ-வை கண்டு பிடித்தனர்.

x