தஜிகிஸ்தானில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ரிக்டராக பதிவாகியுள்ளது.
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு வீடுகள் இடிந்து பலர் வீடுகளை இழந்து வருகின்றனர். அத்துடன் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஜிகிஸ்தானில் இன்று காலை 11.35 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ரிக்டராக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. கோரக் அருகே 120 கிலோ மீட்டர் ஆழந்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் லேசாக அதிர்ந்ததால், மக்கள், வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்