ஈரான் அதிபர் மறைவைத் தொடர்ந்து, அந்நாட்டின் துணை குடியரசுத் தலைவர் முகமது மோக்பர், இடைக்கால அதிபர் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன், அதிகாரிகள், பாதுகாவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஈரான் உள்ளிட்ட வட மேற்கு நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமானது.
சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளிடையே பெரும் போராக வெடிக்க இருந்த இந்த மோதல் அதிர்ஷ்டவசமாக தணிந்தது.
இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் திடீரென உயிரிழந்த சம்பவத்தை, இஸ்ரேலுடனான மோதலை தொடர்பு படுத்தி, அவரது இறப்பில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என ஈரானில் சில தகவல்கள் உலவி வருகின்றன.
இந்நிலையில், 63 வயதான அதிபர் ரைசி மறைவைத் தொடர்ந்து ஈரான் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள நிலையில் அந்நாட்டின் முதல் துணை குடியரசுத் தலைவர் முகமது மொக்பர் (69), இடைக்கால அதிபர் பதவியை ஏற்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முகமது மோக்பர், மக்களவை சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜே ஆகியோர் அடங்கிய ஒரு கவுன்சில் 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை ஏற்பாடு செய்யும் பணியில் உள்ளனர்.
இஸ்ரேலுடனான மோதல், அதிபர் ரைசியின் திடீர் மறைவு போன்ற சூழலில் இடைக்கால அரசை வழிநடத்தும் முகமது மொக்பரின் பணி சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்பதே சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!
ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!
3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!
குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!