பாகிஸ்தானின் துர்பாத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தெற்கு பலூச்சிஸ்தானில் உள்ளது கேச் மாவட்டம். இங்குள்ள துர்பாத் நகரில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் துர்பாத்தில் மட்டும் டெங்குவால் 14 பேர் இறந்துள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் அபு-பக்கர் நேற்று தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் 24,552 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் 5,329 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பலர் இறந்தும், பல ஆயிரம் பேருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டும், சுகாதாரத் துறை கேச் மாவட்டத்தில் அவசர நிலையை பிறப்பிக்கவில்லை. நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வசதிகளை வழங்கவில்லை.
முபாரக் பலூச் என்ற நோயாளி கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முறையான சோதனை மற்றும் ஆய்வக வசதிகள் இல்லை.
இதனால் பெரும்பாலான நோயாளிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நான் கடந்த ஒரு வாரமாக டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. அதே சமயம் சிகிச்சைக்காக கராச்சிக்குச் செல்வதற்கான வசதி என்னிடம் இல்லை." என்றார்.
துர்பாத்தில் வசிக்கும் மற்றொரு நபரான மாஸ்டர் ஆசாத் பலூச் கூறுகையில், “நான் முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிளேட்லெட் பரிசோதனை அறிக்கையைப் பெற்றேன். அதிலிருந்த விவரங்கள் என்னை திகிலடைய வைத்தன. பின்னர் மற்றொரு மருத்துவமனையில் பரிசோதித்தபோது அங்கு கிடைத்த விவரம் திருப்தியடையும் வகையில் இருந்தது" என்றார்.
கேச் மாவட்டம் தவிர, துறைமுக நகரமான குவாடர், பஞ்ச்கூர் மாவட்டத்திலும் டெங்கு வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!