குஸ்தி களமான நாடாளுமன்றம்... எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை; அதிர்ச்சி வீடியோ!


தைவான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல்

தைவான் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் எம்.பிக்கள் அடிதடியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தைவானில் நான்கு மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் வில்லியம் லாய் சிங் தே போட்டியிட்டார். அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற கோமிண்டாங் கட்சியின் சார்பில் ஹூ யு இஹ் போட்டியிட்டார். மேலும் தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜே ஆகியோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் வில்லியம் லாய் சிங் தே பெரும்பான்மை இல்லாமலே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், லாய் சிங் தே வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

தைவான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல்

இந்த நிலையில் தைவான் நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு எம்.பிக்களுக்கு, அதிக அதிகாரம் வழங்குவதற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாக்களிப்பு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

தைவான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல்

இதனால், நாடாளுமன்றத்திற்குள்ளேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மசோதா மீது விவாதம் தொடங்குவதற்கு முன்பே எம்.பிக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் பலர் அவரின் மேஜையின் மேல் எழுந்து நின்று கீழே குதித்தனர்.

இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலைத் தடுக்க வந்த அவைக்காவலர்களுடன் அவர்கள் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட எம்.பி, மீண்டும் உள்ளே வர முயன்றார். ஆனால், அவரை பிடித்து சில எம்.பிக்ள் கீழே தள்ளினர். மேலேயிருந்து விழுந்ததால் அவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் நகைப் பறித்துக் கொண்டு ஒரு எம்.பி அவையில் இருந்து வெளியே ஓடினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x