மியான்மர் ராணுவப் புரட்சிக்கு உதவியதாக அதானி நிறுவனம் மீது நார்வே குற்றச்சாட்டு!


கௌதம் அதானி

மியான்மர் நாட்டில் ராணுவப் புரட்சியின் போது தனிமனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்ட ராணுவத்திற்கு உதவியதாக, அதானி நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டி நார்வே நாட்டின் முதலீடுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே நாட்டின் நார்ஜெஸ் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். குறிப்பாக நார்வே நாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை கொண்டிருக்கும் இந்த வங்கி, 1.7 ட்ரில்லியன் டாலர்கள் அளவிலான முதலீடுகளை செய்து வருகிறது.

இந்த வங்கி அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி இருந்தது. கடந்த 2023ம் ஆண்டு மியான்மர் நாட்டில் நடைபெற்ற ராணுவ புரட்சியின் போது, தனி நபர் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதானி போர்ட்ஸ்

மியான்மர் நாட்டில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனம் சுமார் 150 மில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்திருந்தது. 2023ம் ஆண்டு இந்த நிறுவனத்தை சோலார் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக அதானி நிறுவனம் விளக்கம் அளித்து இருந்தது. ஆனால் யாருக்கு விற்பனை செய்தது என்பது தொடர்பாக எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் நார்ஜெஸ் வங்கி சார்பில் இது குறித்து அதானி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நார்ஜெஸ் வங்கி

எந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என்ற தகவல் இல்லாததால், நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என நார்ஜெஸ் வங்கி கருதியது. மேலும் மியான்மர் ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்களுக்கு அதானி நிறுவனமும் ஆதரவளித்தது போன்ற கருத்தை நார்வே வங்கி தெரிவித்திருந்தது. இதையடுத்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் தங்கள் வங்கி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முதலீடுகளையும் திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அதானி நிறுவனம் சார்பில் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

x