இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி அச்சத்தில் மக்கள்!


நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்திரா தீவுகளில் உள்ள ஆச்சே மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரையோர மக்கள் கடுமையான அச்சத்தில் உள்ளனர்.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்திரா தீவுகளில் உள்ள ஆச்சே மாகாணத்தில் இன்று காலை சரியாக 10.49 மணியளவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிமீ (225 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தோனேஷியா மட்டுமல்லாது அதனை ஒட்டிய கடற்கரை பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. மேலும், சுமத்திரா தீவுகளை ஒட்டிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டன.

ஆனால், இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து இல்லை என்று கூறியுள்ளது. ஆனால், சாத்தியமான பின்அதிர்வுகள் குறித்து எச்சரித்துள்ளது. 6.3 ரிக்டர் அளவில் முதற்கட்ட அளவு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

நேற்று இரவு மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் இரவு 10.01 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடலின் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நேற்று நான்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்களின்படி, முதல் நிலநடுக்கம் 10கி.மீ ஆழத்தில் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

அடுத்தடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏற்பட்ட நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளது. நான்காவது நிலநடுக்கம் 7.7 கி.மீ ஆழத்தில், 5.8 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. ஜப்பான் மற்றும் ரஷ்யா இடையே உள்ள குரில் தீவில் நேற்று முன் தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2023ல் 'நியூஸ் மேக்கர்' : பிரதமர் மோடிக்கு விருது!

x