சீனாவில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்... முன்னாள் கடற்படை தளபதிக்கு வாய்ப்பு!


டோங் ஜன்

சீன பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் லீ சாங்பூ அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, சீன கடற்படையின் முன்னாள் தளபதி டோங் ஜன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீன கடற்படையின் முன்னாள் தளபதியான டோங் ஜன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். டோங் ஜன்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதற்கு சீன அதிபர் ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளார். டோங் ஜன், சீன ராணுவத்தின் கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

லி ஷாங்ஃபூ

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது லி ஷாங்ஃபூ பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த ஆகஸ்ட் 29ம் தேதிக்கு பின்னர் அவர் பொது நிகழ்வில் எதிலும் தென்படவில்லை. அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இதனையடுத்து அவர் காணாமல் போனார் என்ற செய்திகளும் சர்வதேச ஊடகங்களில் எழுந்தன. இந்த நிலையில் அவர் நீக்கப்பட்டதாக அக்டோபர் மாதத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது டோங் ஜன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்

டோங் ஜன்

முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கங் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரின் பதவி பறிப்புக்கான காரணம் பற்றி தகவல் வெளியிடப்படவில்லை. அவருக்குப் பதிலாக வாங் யி புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...


மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

x