ஜப்பானில் 6.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... அதிர்ச்சியில் மக்கள்!


ஜப்பானின் குரில் தீவுகளுக்கு அருகே இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் நிலநடுக்கம் தொடர்கதையாகி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்களின்படி, ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று பிற்பகல் 2.45 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஜப்பானில் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தென்மேற்கு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டது.

கடந்த மே 5 அன்று, ஜப்பானின் மேற்கு மாகாணமான இஷிகாவாவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது, சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஹொக்கைடோவின் வடக்கு தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

அதேபோல அக்டோபரிலும் டோரிஷிமா தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள இசு தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு 1 மீட்டர் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக சுனாமி தாக்கவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!

x