காரில் இறந்து கிடந்த ஆஸ்கர் விருது பட நடிகர்... திரைத்துறை அதிர்ச்சி!


லீ சன் கியூன்

தென்கொரிய நடிகர் லீ சன் கியூன், இன்று காலை தனது காருக்குள் இறந்த நிலையில் கிடந்தார். அவரது மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லீ சன் கியூன் காரில் இறந்து கிடந்தார்.

தென்கொரிய நடிகர் லீ சன் கியூன் (48). இவர் கடந்த 2020-ம் ஆண்டு பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படமான 'பாராசைட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சியோலில் இன்று காலை லீ சன் கியூன், தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த சில மாதங்களாக சட்ட விரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக லீ சன் கியூன் அந்நாட்டு காவல் துறை விசாரணையை எதிர்கொண்டு வந்தார். காவல் துறை விசாரணையின்போது, ‘இரவு விடுதி ஒன்றில் தவறுதலாக போதைப் பொருளை உட்கொண்டதாக' அவர் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தனது காரில் லீ சன் கியூன் இறந்து கிடந்ததைக் கண்டு அவரது மனைவி யோன்ஹாப், போலீஸாருக்குத் தகவல் அளித்தார். மேலும், லீ சன் கியூன் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது.

'பாராசைட்' படத்தில் ஜோ யோ ஜியாங்குடன் தோன்றும் லீ சன் கியூன்.

கடந்த 1975-ம் ஆண்டு பிறந்த லீ சன் கியூன், 'பாராசைட்' படத்தில் பணக்கார தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். 'ஹெல்ப்லெஸ்', 'ஆல் அபவுட் மை வைஃப்' மற்றும் பல குறிப்பிடத்தக்க தென் கொரிய திரைப்படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

ஆப்பிள் டிவி பிளஸ்-ன் முதல் கொரிய தொடரான 'டாக்டர் பிரைன்' தொடரிலும் லீ சன் கியூன் நடித்துள்ளார். கடந்த 2021-ல் வெளியான இந்த தொடர் 6 பாகங்களைக் கொண்ட அறிவியல் புனைகதை த்ரில்லராகும்.

லீ சன் கியூன் திடீர் மரணம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

அதிகாலையில் ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை... காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!

x