இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியது ஈரான்... எகிப்தில் உச்சகட்ட பாதுகாப்பு!


தாக்குதலை தொடங்கிய ஈரான்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல் கட்டமாக ட்ரோன் தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது அண்மையில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானிய முக்கிய தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.

எந்த நேரமும் ஈரான் - இஸ்ரேல் போர் வெடிக்கும் என்ற உச்சகட்ட பரபரப்பு நிலவி வந்த நிலையில், முதல் கட்டமாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இஸ்ரேல் மீது ஈரான் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஈரான் மொத்தம் 200 ட்ரோன்களை இஸ்ரேல் மீது நேற்று இரவு ஏவியுள்ள நிலையில் இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரம் பயணித்து இன்று காலை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை குறிவைத்து ஈரானிய ஆளில்லா விமானம் தாக்கும் அச்சத்தின் மத்தியில் எகிப்தின் வான் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எகிப்தின் இராணுவ ஜெனரல் கமாண்ட் நிலைமையைக் கண்காணிக்கவும், நாட்டின் வான்வெளி தொடர்பாக தேவையான முடிவுகளை எடுக்கவும் ஒரு குழுவை அமைத்துள்ளதாக எகிப்திய இராணுவம் கூறியுள்ளது.

ஏற்கனவே இஸ்ரேல் தொடர்பான சரக்கு கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. அதில் இந்திய மாலுமிகள் 17 பேர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடங்கியுள்ளது.

x