அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!


சீனா, இந்தியா

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மீது உரிமை கோரி வரும் சீனா, அம்மாநிலத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தங்கள் நாட்டின் பகுதி என உரிமை கோரி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை மையப்படுத்தி அவ்வப்போது ஏதாவது கருத்துகளை வெளியிட்டு, இந்தியாவுடன் சீண்டலில் ஈடுபடுவதை அந்நாடு வாடிக்கையாக வைத்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது அருணாச்சலப் பிரதேசத்தன் 30 இடங்களுக்கு அந்நாடு மறுபெயர் சூட்டி அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கும், பெயரிடுவதற்கும் பொறுப்பான சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தின் மறு பெயரிடப்பட்ட பகுதிகள் என குறிப்பிட்டு நான்காவது பட்டியலை வெளியிட்டுள்ளதாக ஹாங்காங் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாடு 'ஜாங்னான்' என்ற பெயரில் அழைத்து வருகிறது.

இந்திய பகுதியை உரிமை கோரி வரும் சீனா

தற்போது சீனாவால் மறுபெயர் வைக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலை கணவாய் உள்ளிட்டவை அடங்கும். அந்த பெயர்கள் சீன எழுத்துகள், திபெத்திய மற்றும் பின்யின், மாண்டரின் சீனாவின் ரோமானிய எழுத்துகளில் வெளியிடப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா இதற்கு முன்பு 3 முறை மறு பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டுள்ளது. 2017ல் வெளியிட்ட முதல் பட்டியலில் 6 இடங்களுக்கும், 2021ம் ஆண்டில் 15 இடங்களுக்கு மறு பெயரிட்டு இரண்டாவது பட்டியலையும், 2023ம் ஆண்டில் 11 இடங்களுக்கான பெயர்களுடன் 3வது பட்டியலையும் வெளியிட்டது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுபெயரிடுவதற்கான சீனாவின் நடவடிக்கையை இந்தியா பலமுறை நிராகரித்துள்ளது. அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், புதிய பெயர்களை வைப்பது, நிஜத்தை மாற்றாது எனவும் இந்தியா ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x