ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் மாயமாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 22-ஆம் தேதி நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 143 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றதாக தகவல் வெளியானது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். ஆனால் அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது.
கடந்த 22-ஆம் தேதி குரோகஸ் சிட்டி ஹால் மீதான தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில், அவர்களைத் தவிர, தாக்குதலின் போது அங்கிருந்த 100 பேரைக் காணவில்லை என்று ரஷ்யா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அரசிடம் இது குறித்து முறையீட்டுள்ளதாகவும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!