ஃபேஸ்புக் பழக்கத்தில் பாகிஸ்தானியரை மணந்த பெண்: குழந்தைகளைப் பார்க்க இந்தியா திரும்பியதால் பரபரப்பு!


பாகிஸ்தான் காதலருடன் அஞ்சு

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானியரை திருமணம் செய்து கொள்ள பாகிஸ்தான் சென்றிருந்த இந்தியப் பெண் அஞ்சு, தன் குழந்தைகளைப் பார்ப்பதற்காக மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அஞ்சு(34). அவர் அரவிந்த் என்பவரை மணந்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற கிராமத்தில் வசித்துவரும் நஸ்ருல்லா என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் அவரை நேரில் காண வேண்டும் என்று ஆசைப்பட்டு 30 நாட்கள் விசாவுடன் கடந்த ஜூலையில் அவர் பாகிஸ்தான் சென்றடைந்தார்.

நஸ்ருல்லாவுடன் அஞ்சு

தங்களுக்குள் காதல் ஏதும் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்திருந்த நிலையில் பின்னர் இவர்களது திருமணம் நடந்ததாக செய்தி வெளியானது. மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அஞ்சு

இந்த சூழலில் பாகிஸ்தானில் இருந்து வாகா எல்லை வழியாக அவர் இந்தியாவிற்கு நேற்று வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்க முடியாமல் அவர் தவித்ததாக கடந்த செப்டம்பர் மாதம் நஸ்ருல்லா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் குழந்தைகளைப் பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை என்பதால் அவர் இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!

x