அமெரிக்காவில் பரபரப்பு: டொனால்டு டிரம்ப் மீது மீண்டும் கொலைமுயற்சி!


முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மீண்டும் கொலைமுயற்சி நடந்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபரும், 2024 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டெனால்ட் டிரம்ப் மீது, நேற்று இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு புளோரிடாவில் உள்ள கோல்ஃப் கிளப் அருகே இந்த கொலை முயற்சி நிகழ்ந்துள்ளது. டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க ரகசிய சேவை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், புளோரிடா கோல்ஃப் கிளப்பில் மீண்டும் கொலை முயற்சி அரங்கேறி உள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிரம்ப் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், சந்தேகத்திற்குரிய 58 வயதான ரியான் வெஸ்லி ரூத் என அடையாளம் காணப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ரகசிய சேவை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

கோல்ப் மைதானத்தில் டிரம்ப் இருந்த தூரத்தில் இருந்து சுமார் 275 மீட்டர் தொலைவில் சந்தேக நபர் ஏகே-47 ரக துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்தியிருந்ததாகவும், அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், துப்பாக்கி ஏந்திய நபர் தனது துப்பாக்கி, இரண்டு பைகள் மற்றும் பிற பொருட்களை கீழே இறக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் மார்ட்டின் கவுண்டிக்கு அருகில் அடுத்த சில மணிநேரங்களில் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

x