கருங்கடல் பகுதியில் புயல் தாக்குதல்: 1.5 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு!


சாலைகளில் வெள்ளம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் கருங்கடல் பகுதியில் புயல் தாக்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 1.5 லட்சம் வீடுகளில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் வாடி வருகின்றனர்.

ஊருக்குள் புகுந்த வெள்ளம்

ரஷ்யாவின் அரசு ஊடகம் மற்றும் உக்ரைனின் எரிசக்தி அமைச்சகத்தின் தகவல்படி, கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட புயலால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

புயல் தாக்கியதில் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததால் கிரீமியா, ரஷ்யா மற்றும் உக்ரனில் 1.5 லட்சம் வீடுகளுக்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் இருளில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக கிரீமியாவில் அவசரகால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக சொச்சி நகரில் ஒருவரும், கிரீமியாவில் ஒருவரும், கெர்ச் ஜலச்சந்தி பகுதியில் ஒருவரும் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு உக்ரைன் துறைமுகமான ஒடேசாவில் மின் உற்பத்தி நிலையத்தின் புகைபோக்கி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

x