எதிரி ஒரு மில்லி மீட்டர் முன் நகர்ந்தாலும் போருக்குத் தயாராக இருக்குமாறு வடகொரிய ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் கிங் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் மூண்டுள்ளது.
வடகொரியா மற்றும் தென் கொரியா இடையேயான போர் பதற்றம் சமீப காலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுடன் தென்கொரியா நட்பு பாராட்டுவதற்கு வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஜப்பான் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பியோங்கியாங் நகரில் இருந்து சீயோல் நகரை தாக்கும் வகையில் ஆயுதப் பயிற்சியை வடகொரியா நடத்தியுள்ளது.
இந்த பயிற்சியை துவக்கி வைத்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “எதிரி ஒரு மில்லி மீட்டர் முன் நகர்ந்தாலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும்” என ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளார். பிரதான எதிரியான தென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுள்ள இந்த போர்ப் பயிற்சிகள் மூலமாக தென் கொரிய தலைநகர் சியோலை தாக்குவதற்கு வடகொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சியின் போது உண்மையான போர் தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியாவின் ராணுவத் தளபதி, வட கொரியாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஒருவேளை தென்கொரியா தங்கள் மீது போர் தொடுத்தால், உறுதியான மற்றும் இறுதி வரையிலான நடவடிக்கையை மேற்கொள்வோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இரு நாடுகளின் போட்டிப் பிரகடனங்களால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!
மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரிசுப்பொருட்களை விநியோகிக்கும் திமுக?! களேபரமான கரூர்!
அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா...ஃபயர் விடும் ரசிகர்கள்!
போர்க்களமான புதுச்சேரி... ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி... தள்ளு முள்ளுவால் பரபரப்பு!