‘என் உடல் என் உரிமை’ என்று கருக்கலைப்பு செய்து கொள்வதை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரித்து, உலகின் முதல் நாடாக பிரான்ஸ் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா இயற்றி, நிறைவேற்றியது.
கருக்கலைப்பு செய்து கொள்வதை பெண்களின் தனிப்பட்ட உரிமையாக அறிவிக்கக்கோரி பிரான்ஸில் பெண்கள் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். கடந்த 2022ல் , பெண்கள் கருக்கலைப்பு செய்வது அடிப்படை உரிமை இல்லை என்று அமெரிக்காவில், அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பிறகு பிரான்ஸில் கருக்கலைப்பு உரிமையை பெண்களின் தனிப்பட்ட உரிமையாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை குரல்கள் ‘என் உடல் என் உரிமை’ என்கிற கோஷத்துடன் வலுத்தது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதற்கான உறுதிமொழியை அளித்திருந்த நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் அடிப்படை உரிமையாக கருக்கலைப்பை அங்கீகரிக்கும் சட்ட மசோதா நேற்று நிறைவேறியது.
நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டுக்கூட்டத்தில் கருக்கலைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
அமெரிக்கா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமைகள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், உலகின் முதல் நாடாக பிரான்ஸ் கருக்கலைப்பு செய்து கொள்வது பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று அங்கீகரித்துள்ளது.
இது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திரண்ட மக்கள், ஈபிள் கோபுரத்தில் "எனது உடல், எனது விருப்பம்" என்கிற வாசகங்களுடன் வண்ணவிளக்குகள் மின்ன மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். சர்வதேச பெண்கள் உரிமைகள் தினமான மார்ச் 8ம் தேதி, சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும் வகையில், இதை விழாவாக அரசாங்கம் நடத்தும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!
எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!
அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!
காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!