இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதலுக்கு காரணம் என்ன? - ஓர் விரைவுப் பார்வை


ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு இடையே மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாக இருதரப்பும் தெரிவித்துள்ள விளக்கம் குறித்து பார்ப்போம்.

ஹிஸ்புல்லா: கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ உயர்மட்ட தளபதியான ஃபவத் ஷுக்ர் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. ராக்கெட் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளை டார்கெட் செய்து தாக்குதலை தொடுத்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு ஈரானின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் சொல்வது என்ன? - லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேலை நடத்த ஆயத்தமானதை அறிந்து தற்காப்பு கருதி ஹிஸ்புல்லா நடமாட்டம் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இது தங்கள் நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு 48 மணி நேர அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வரும் சூழலில் தற்போது லெபனான் மீதும் அது நீள்வது மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

x