அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து


வாஷிங்டன்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இரு நாடுகள் இடையே பாதுகாப்புத்துறை தொடர்புடைய இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தளவாடப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேவையில் பாதுகாப்பு (எஸ்ஓஎஸ்ஏ), தகவல் தொடர்பு அதிகாரிகளை நியமனம் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை இரு நாடுகள் இடையே கையெழுத்தாகியுள்ளன.

இரு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எஸ்ஓஎஸ்ஏ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும், தளவாடப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேவையில் தேவையான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா- இந்தியா பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் வலுவடையும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் விக் ராம்தாஸ் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய நிறுவனங்கள் பயனடையும். எஸ்ஓஎஸ்ஏ ஒப்பந்தத்தை அமெரிக்கா 18 நாடுகளுடன் செய்துள்ளது. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை சந்தித்து பேசிய ராஜ்நாத் சிங், ‘‘அமெரிக்காவில் பணியாற்றும் அதே நேரத்தில், நீங்கள் தாய்நாட்டுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். நமக்கு வஞ்சககுணம் இல்லை. நாம் ஏமாற்றப்படலாம். ஆனால், நாம் ஒருபோதும் பிறரை ஏமாற்றியதில்லை’’ என்றார்.

x