10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தந்தையின் வங்கி பாஸ்புக்! கோட்டீஸ்வரரான மகன்!


10 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையின் வங்கி கணக்கு புத்தகம் கிடைத்ததால் மகன் கோடீஸ்வரர் ஆன சம்பவம் சிலியில் நடந்திருக்கிறது.

சிலி நாட்டைச் சேர்ந்த பிலோ ஜோசா என்பவரின் தந்தை தனது வங்கிக்கணக்கில் 1.40 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறார். இந்த தகவலை தனது குடும்பத்தினர் யாருக்கும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் திடீரென்று பிலோ ஜோசாவின் தந்தை உயிரிழந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் தந்தை மறைந்து 10 ஆண்டுகளுக்கு பின்பு அவரது மகன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தந்தையின் வங்கி புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வங்கிக்கணக்கில் 1.40 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வங்கிக்கு சென்று பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அரசு தரப்போ வங்கி மூடப்பட்டு விட்டதால் பணம் தர முடியாது என்று கூறிவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவரது மகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு 8 கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. தந்தை இறந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வங்கி புத்தகத்தின் மூலம் மகன் கோடீஸ்வரர் ஆகியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

x