'வானத்தில் ஆச்சரியம்'... தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்த புகைப்படம் வைரல்!


ஜேகோவிச்சுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை, ஸ்பெயின் செல்லும் வழியில் விமானப் பயணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தை வரும் 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டுக்கு 8 நாள் பயணமாக கடந்த 27-ம் தேதி மாலை புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், ஸ்பெயின் செல்லும் வழியில் விமானப் பயணத்தில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று திரும்பிய செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச்சை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பதிவில், “வானத்தில் ஆச்சரியம். ஸ்பெயின் செல்லும் வழியில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை சந்தித்தேன்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஜேகோவிச்.

நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மற்றும் யுனைடெட் கோப்பை போட்டிகளுக்காக கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மெல்போர்னில் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னரிடம் ஜோகோவிச் தோல்வியடைந்தார். ஜோகோவிச்சும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

x