மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் வீச்சு... பருவநிலை ஆர்வலர்களால் பரபரப்பு!


ஓவியத்தின் மீது சூப்பை வீசும் பருவநிலை ஆர்வலர்கள்

உலகப்புகழ் பெற்ற லியனார்டோ டாவின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை சூப்பை ஊற்றி இளம்பெண்கள் சேதப்படுத்தி முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனோலிசா ஓவியம்

பிரான்சில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் மோனாலிசா ஓவியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகின் மிகவும் பிரபலமான ஓவியரான லியனார்டோ டாவின்சியின் இந்த ஓவியம் கருதப்படுகிறது. அதனால் இதற்கு பாதுகாப்பும், மதிப்பும் மிக அதிகம்.

இந்த நிலையில் இந்த ஓவியத்தின் மீது சூப்பை வீசி சேதப்படுத்தும் வகையில் தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு நேற்று வந்த பருவநிலை ஆர்வலர்களான இரண்டு பெண்கள் திடீரென பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஓவியம் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர்.

தங்கள் கையில் வைத்திருந்த சூப்பை ஓவியத்தின் மீது வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றியது பதிவாகியிருந்தது.

ஓவியம் அதே நின்று முழக்கமிடும் பெண்கள்

எனினும், குண்டு துளைக்காத கண்ணாடியால் ஓவியம் பாதுகாக்கப்பட்டு இருந்ததால், அதனை அவர்களால் சேதப்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியில் சூப் சிதறி விழுந்தது. பின்னர் அங்கே நின்றவாறே உணவுப் பாதுகாப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பிய அவர்கள், ஓவியத்தின் முன் நின்று கொண்டு ‘ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு’ உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டு விட்டது என்றும் முழக்கமிட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய அருங்காட்சியகத்தின் பாதுகாவலர்கள், மோனாலிசா ஓவியம் இருந்த இடத்தைக் கருப்பு திரைகளால் மறைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனாலிசா ஓவியம் இதற்கு முன்பாக பலமுறை சேதப்படுத்தப்பட்டும், ஒருமுறை திருடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்?: இன்று கூடுகிறது அதிமுக தொகுதி பங்கீட்டுக்குழு!

பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி: சோகத்தில் முடிந்த சுற்றுலா!

x