போருக்கு தயாராக வீரர்களுக்கு உத்தரவு... அமெரிக்க முடிவால் உலகப்போர் மூளுமா?


அமெரிக்க வீரர்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் களமிறங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று 2000 வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டு உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் நேரடியாக களமிறங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்க சுமார் 2,000 அமெரிக்க வீரரக்ளுக்கு பென்டகன் "களமிறங்க தயார் ஆகுங்கள்" என்ற உத்தரவை அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜே பைடனின் உத்தரவின் பெயரில் இந்த உத்தரவு சென்றுள்ளது. போர் உச்சம் அடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதனால் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல் படைகளுக்கு கூடுதல் மருத்துவ உதவி அல்லது வெடிகுண்டு உதவி, ஆயுத உதவி போன்ற பல்வேறு உதவிகளை அமெரிக்க படை வீரர்கள் வழங்குவார்கள். நேரடி பாதுகாப்பு, தாக்குதல் பணிகள், பல்வேறு இடங்களை பிடிப்பது உள்ளிட்ட பணிகளிலும் இஸ்ரேலுக்கு அமெரிக்க படைகள் ஆதரவாக இருக்கும் . இஸ்ரேலுக்கு மட்டுமின்றி காஸா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட இவர்கள் அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜோ பைடன்

அங்கே படைகளை குவித்து இஸ்ரேலுக்கு போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் வகையில் அமெரிக்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை போரில் அமெரிக்கா கப்பலை அனுப்பி இருந்தாலும் நேரடியாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. உதாரணமாக அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு போர் கப்பல் மத்திய கிழக்கில் கால் பதித்து உள்ளது.

இஸ்ரேலுக்கு உதவ உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலும் சில சிறந்த அமெரிக்க போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்குள் இந்த கப்பல் நுழைந்துள்ளது.

யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு அமெரிக்காவின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலாக பரவலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 1,092 அடி (333 மீட்டர்) நீளமும், அதன் விமான தளத்தில் 256 அடி (78 மீட்டர்) அகலமும் மற்றும் 250 அடி (76 மீட்டர்) உயரமும் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பலாகும்.

போரால் பாதிக்கப்பட்டு காஸா நகரம்

இதில் 3000 வீரர்கள் இருக்க முடியும். 10 ஆயிரம் வீரர்களை கூட கொண்டு செல்ல முடியும். 25 போர் விமானங்களை கொண்டு செல்ல முடியும். இந்த கப்பல் மத்திய கிழக்கிற்கு சென்றாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் இப்போது படைகளை களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி உள்ளதால் போர் உண்மையில் உலகப்போராக மாற உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!

x