இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் காலியாகும் காஸா... 10 லட்சம் மக்கள் வெளியேறியதாக ஐ.நா தகவல்!


வெளியேறும் மக்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகும் காசாவில் இருந்து இதுவரை 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இடம் பெயரும் மக்கள்

ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போரானது 11-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா நகரை முற்றிலும் உருக்குலைத்து வருகிறது.

இதனால் பெரும்பாலான காஸா நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் ‘’போர் தொடங்கியது முதல் 7 நாட்களில் மட்டும் இதுவரை 10லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து உள்ளனர்’’ என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சிதிலமடைந்து கிடக்கும் காஸா.

இதுகுறித்து ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா கூறுகையில், ''காஸாவில் போர் தொடங்கியது முதல் 7 நாட்கள் வரை மட்டும் இதுவரை 1 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்'' எனத் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

x