இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் படையின் மற்றொரு தளபதி கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது அண்மையில் ஹமாஸ் அமைப்பினர் திடீரென்று ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்பின் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காஸா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் விடுத்த கெடு முடிவடைந்து இருக்கிறது. அதே நேரத்தில் ஹமாஸில் உள்ள மக்களை வெளிவரவிடாமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதனிடையே, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்து இருக்கிறது. இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சி வழங்கிய தகவல்கள் அடிப்படையில் தெற்கு கான் யூனிட் பட்டாலியன் தளபதி பிலால் அல்-கெத்ரா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒரு தளபதி கொல்லப்பட்டது நினைவில் கொல்லத்தக்கது.