உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ம் தேதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், போட்டித் தொடரை நடத்தும் இந்தியாவும் வரும் 29ம் தேதி பலப்பரிட்சை நடத்துகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற உள்ள இந்த போட்டியை காண இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் அரசு முறை பயணமாக இந்தியா வரும் அவர், இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 28ம் தேதி டெல்லி வரும் அவர், 29ம் தேதி நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து உலக கோப்பை போட்டியை காண உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், ரிஷி சுனக் பயணம் குறித்து இருநாடுகளும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
விரைவு ரயில் விபத்து... பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு... 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்! மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு; அரசுக்கு 3.48 கோடி இழப்பு! HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்! போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த தேனி ஆசிரியை- அதிகாரிகள் அதிர்ச்சி! அதிர்ச்சி... தூங்கும்போது இரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை