அதிர்ச்சி... விமான விபத்தில் பிரபல நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு


உயிரிழந்தவர்கள்

கரீபியன் தீவு கடலில் விமானம் விழுந்த விபத்தில் பிரபல நடிகர் மற்றும் அவரது 2 மகள்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்தவர் கிறிஸ்டியன் ஆலிவர். ஹாலிவுட் நடிகர். இவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12). கிறிஸ்டியன் ஆலிவர் நேற்று மாலை தனது 2 மகள்கள் மற்றும் பைலட் ஆகியோருடன் கரீபியன் தீவுகளுக்கு விடுமுறையைக் கொண்டாட சென்றார்.

அப்போது பெகுய்யா என்ற சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா நகரத்தை நோக்கி 4 பேரும் குட்டி விமானத்தில் பயணம் செய்துள்ளனர். ஆனால் விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கரீபியன் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கிறிஸ்டியன் ஆலிவர் உள்பட 4 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 4 பேரின் சடலங்களையும் மீட்டனர். ஆரம்ப காலத்தில் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர் கிறிஸ்டியன் ஆலிவர்.

அதன்பின் ‘தி குட் ஜெர்மன்’ (The Good German) என்கிற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி, இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x