வளமான, புதிய வங்கதேசத்தை நாம் உருவாக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் கலீதா ஜியா பேச்சு


டாக்கா: வங்கதேசத்தில் புதிய அரசு அமைய உள்ள நிலையில் முன்னாள் பிரதமரும், வங்கதேசதேசியவாத கட்சியின் தலைவருமான பேகம் கலீதா ஜியாசிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். டாக்காவின் நயாபல்டான்பகுதியில் நடைபெற்ற கட்சித்தொண்டர்கள் பேரணியில் வீடியோ திரையில் தோன்றி கலீதா ஜியா பேசியதாவது:

நான் தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதற்காக செய் அல்லது செத்து மடி எனும் போராட்டத்தில் ஈடுபட்ட துணிச்சலான மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனதுவிடுதலைக்காக போராடிய, பிரார்த்தனை செய்த மக்களுக்குநன்றி. இந்த வெற்றியானது கொள்ளை, ஊழல் மற்றும் தவறான அரசியலில் இருந்துமீண்டுவருவதற்கான ஒரு புதியவாய்ப்பை நமக்கு கொண்டு வந்துள்ளது. நாம் புதிய வளமான,வங்கதேச நாட்டை கட்டமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

x