அமெரிக்காவில் புற்றுநோய்க்கான போலி மருந்து விற்பனை: பீகாரைச் சேர்ந்தவர் கைது


ஹூஸ்டன்: அமெரிக்காவில் புற்றுநோய்க்கான போலி மருந்துகளை விற்பனை செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(43). இவர் அமெரிக்காவில் புற்றுநோய்க்கான போலி மருந்துகளை விற்பனை செய்ததாகவும், கடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு நேற்று முன்தினம் ஹூஸ்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சஞ்சய் குமார் மற்றும் அவரது குழுவினர் அமெரிக்காவில் போலி புற்றுநோய் மருந்துகளை விற்றதாக கூறப்படுகிறது.

கீட்ருடா என்பது 19 வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகும். இது மெர்க் ஷார்ப் (Merck Sharp) மற்றும் டோஹ்மா எல்கேவால் (Dohme LLC) மட்டுமே தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இவர்களைத் தவிர வேறு யாருக்கும் அதை விற்கவோ அல்லது தயாரிக்கவோ உரிமம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தான், சஞ்சய் குமார் புற்றுநோய்க்கான போலி மருந்துகளை விற்பனை செய்ததாகவும், கடத்தியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

x