அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்: ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகல்!


அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ்க்கு பைடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

தற்போதைய அதிபரான ஜோ பைடன் ஜனநாயக கட்சி வேட்பாளராக மீண்டும் களம் இறங்கினார். அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததுடன், டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பேசுவதற்கு பைடன் மிகவும் தடுமாறினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்ததுடன் பைடன் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும், அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். எனவே கமலா ஹாரிசை ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளாரக நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேழ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில் ஓரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக தனது கடமைகளில் முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். மேலும், 2020-ம் ஆண்டு துணை அதிபர் வேட்பாளார் தேர்வில் எனது முதல் முடிவு கமலா ஹாரீஸ் தான் என்றும், அது தான் எடுத்த சிறந்த முடிவு என்றும் கூறியுள்ளார். அத்துடன், இந்த ஆண்டும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸ் தொடர தனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன். மேலும் ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது, அதை அனைவரும் செய்வோம் என்று ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

x