கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்த அமீரக இளவரசி


துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ)பிரதமரும், துணை அதிபரின் மகளுமான இளவரசி ஷேக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித்அல் மக்தூம் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

ஷேக்கா மஹ்ராவுக்கும், ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின்மனா அல் மக்தூமுக்கும் கடந்தஆண்டு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிது நாட்களே ஆனநிலையில் விவாகரத்து அறிவிப்பைஇளவரசி ஷேக்கா மஹ்ரா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஷேக்காமஹ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, ‘‘அன்புள்ள கணவரே.. உங்களுக்குவேறொரு துணை கிடைத்துவிட்டதால், நம் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான்உங்களை விவாகரத்து செய்கிறேன். உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படங்கள் நீக்கம்: மேலும் இருவரும் தங்களதுஇன்ஸ்டாகிராம் பக்கங்களில்,ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து புகைப் படங்களை யும் நீக்கி உள்ளனர்

x