‘அந்த 16 பேரைக் காப்பாற்றுங்கள்!’


இந்தியாவைச் சேர்ந்த 16 மாலுமிகள், ஈகுவெடோரியல் கீனி எனும் தீவு நாட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியத் தூதரகம் இறங்கியிருக்கிறது.

‘எம்டி ஹீரோயிக் இடுன்’ எனும் கப்பலில் பணிபுரியும் ஊழியர்கள் 16 பேர் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான ஈகுவெடோரியல் கீனியில், ஆகஸ்ட் மாதம் முதல் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகச் சிறைவைக்கப்பட்டிருப்பதாக இந்தியத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கடிதம் எழுதியிருக்கிறார். இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு ட்வீட் மூலமும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்நிலையில், ஈகுவெடோரியல் கீனியின் சிறைகளில் உள்ள இந்திய மாலுமிகளிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக, ஈகுவெடோரியல் கீனி மற்றும் நைஜீரியா அரசுகளுடன் பேசிவருவதாகவும், இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் ட்வீட் செய்திருக்கிறது.

x