மியான்மரில் நிலநடுக்கம்: இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்ட நில அதிர்வு!


மியான்மர் நாட்டில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது.

இன்று அதிகாலை 3.52 மணி அளவில், மியான்மரில் வடமேற்குப் பகுதியில் 162 கிலோமீட்டர் தொலைவில், சகாய்ங் பிராந்தியத்தில் உள்ள ஷ்விபோ மாவட்டத்தில் 140 கிலோமீட்டர் ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக, மியான்மரின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது. எனினும், பிரான்ஸின் நில அதிர்வுக்கான தேசிய மையம், இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாகத் தெரிவித்தது. பின்னர், ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இதன் அளவு 5.6 ரிக்டர் எனக் கூறியிருக்கிறது.

இதன் தாக்கம், அசாமின் தெற்குப் பகுதி, மணிப்பூர், நாகாலாந்து என இந்தியாவிலும் உணரப்பட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.


x