பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு 3 லட்சம் ஆணுறைகள் சப்ளை!


பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு 3 லட்சம் ஆணுறைகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை அதிகபட்ச ஆணுறை சப்ளையாகும்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 ஜூலை 26-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. அன்று மாலை 7.30 மணிக்கு சீன் ஆற்றில் பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் விளையாட்டு போட்டிகள் தொங்க உள்ளது. இதையடுத்து விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்ககளுக்கு 3 லட்சம் ஆணுறைகளை அமைப்பாளர்கள் சப்ளை செய்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆணுறைகள் விநியோகம் 1988-ம் ஆண்டு தொடங்கியது. எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக சியோல் ஒலிம்பிக்கில் முதன்முறையாக இந்த ஆணுறைகள் விநியோகிக்கப்படும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கின் போது, ​​​​கொரோனா தொற்றுநோய் காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு 1.5 லட்சம் ஆணுறைகளை வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை வரலாறு காணாத அளவில் ஆணுறைகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் காதல் நகரம் என்று பாரிஸ் அழைக்கப்படுகிறது. எனவே அமைப்பாளர்கள் அதிக எண்ணிக்கையிலான ஆணுறைகளை வழங்கியுள்ளனர். மேலும், இதைப் பயன்படுத்தி உங்கள் நாட்டில் எச்ஐவி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று வாய்மொழியாகச் சொன்னார்கள். இந்த ஆணுறையின் அட்டையில் பாரிஸ் ஒலிம்பிக் 2024 என்று எழுதப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு சிட்னி விளையாட்டுப் போட்டியின் போது, ​​70 ஆயிரம் ஆணுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் அவை காலியானதால் கூடுதலாக 20 ஆயிரம் ஆணுறைகள் சப்ளை செய்யப்பட்டன. 2016-ல் ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது பெண்களுக்கும் கருத்தடை சாதனங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

x