இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா?


இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் முதல் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கியஸ்தர்கள் பிரிட்டனுக்கு வரவுள்ளனர்.

இந்த சூழலில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதோ அந்தப் பட்டியல்:

1. ரஷ்யா

2. பெலாரஸ்

3. ஆப்கானிஸ்தான்

4. மியான்மர்

5. சிரியா

6. வெனிசுலா

அதேபோல, வட கொரியா, ஈரான் மற்றும் நிகரகுவாவின் தூதர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த நாடுகளின் தலைவர்களுக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படவில்லை.

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மூன்றாம் சார்லஸ் மன்னர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும் உக்ரைன் மீதான போர் காரணமாக, புதினுக்கு ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

x