‘இன்றியமையாத கூட்டாளி இந்தியா’ - அமெரிக்கா திட்டவட்டம்!


அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், ‘இந்தியா எங்கள் இன்றியமையாத கூட்டாளி’ என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்ததுடன், அந்நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. எனினும், பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் ரஷ்யாவுடனான உறவை இந்தியா கைவிடவில்லை. கூடவே சலுகை விலையில் ரஷ்யா வழங்கும் எண்ணெய்யைக் கூடுதலாகவே இறக்குமதி செய்துவருகிறது. ராணுவத் தளவாடங்களையும் ரஷ்யாவிடமிருந்து வாங்கியிருக்கிறது.

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்புச் செயலாளர் கரீன் ஜான் பியர்

இந்தச் சூழலில், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய வெள்ளை மாளிகை செய்தித்தொடர்புச் செயலாளர் கரீன் ஜான் பியர், “எங்கள் கூட்டாளிகளை நாங்கள் இன்றியமையாத கூட்டாளி என்றே கருதுகிறோம். அமெரிக்கா - இந்தியா இடையிலான ராஜதந்திர ரீதியிலான கூட்டு என்பது சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட உறவாகும்” என்று குறிப்பிட்டார்.

x