உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வண்டாக ஸ்டாக் கருதப்படுகிறது. அதன் விலை 75 லட்ச ரூபாயாகும்.
இதையெல்லாமா விலை கொடுத்து வாங்குவாங்க என்று நீங்கள் புருவம் உயர்த்துவது சரி தான். ஆனால் இதன் விலையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம்.. இந்த வண்டின் விலை ஜஸ்ட், 75 லட்ச ரூபாய் தான் என்று கண் சிமிட்டுகிறார்கள். உலகின் மிகவும் மதிப்புமிக்க பூச்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 'ஸ்டாக் பீட்டில்' அல்லது ஸ்டேக் பீட்டில் என்று அழைக்கப்படும் இது, நம்பிக்கையின் காரணமாக மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது.
ஸ்டாக் வண்டுகளின் சிறப்பு என்னவென்றால், இது அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. இதனால் இதன் விலை அதிகம். இந்த வண்டு இருந்தால், விரைவில் செல்வம் கிடைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். சயின்டிஃபிக் டேட்டா இதழில் இது குறித்து வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, இந்த வண்டுகள் காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க சப்ராக்ஸிலிக் கலவையை உருவாக்குகின்றன. அவற்றின் விரிவாக்கப்பட்ட தாடைகள் ஆண் இனங்களில் பாலிமார்பிஸத்திற்கு அறியப்படுகின்றன.
குளிர் வெப்பநிலையை இந்த வண்டுகள் தவிர்க்கின்றன. அவை வெப்பமான, வெப்பமண்டல காலநிலையில் சிறப்பாக செயல்படுகின்றன. இவை இயற்கையாகவே வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. ஆனால் அவை சில பூங்காக்களில் காணப்படுகின்றன. இறந்த மரம், முட்கள் மற்றும் பாரம்பரிய தோட்டங்கள் தான் இந்த வண்டுகளின் புகலிடம்.
இந்த வண்டுகளின் முக்கிய உணவென்பது இனிப்பு திரவங்கள் தான். உதாரணமாக மரத்தின் சாறு மற்றும் அழுகும் பழச்சாறு. அதன் முதன்மை ஆற்றல் மூலமாக அது ஒரு லார்வாவாக சேமிக்கப்படும் ஆற்றலாகும். ஸ்டாக் வண்டுகள் ஆரோக்கியமான தாவரங்களை எதுவும் செய்யாது. ஏனென்றால் அவை இறந்த மரத்தை மட்டுமே உண்கின்றன.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, இந்த வண்டுகள் பொதுவாக 2 முதல் 6 கிராம் எடையுள்ளவை. சராசரி ஆயுட்காலம் 3 முதல் 7 ஆண்டுகள். பெண் வண்டுகளின் நீளம் 30-50 மிமீ, ஆண் வண்டுகளின் நீளம் 35-75 மிமீயாகும். ஆண் ஸ்டாக் வண்டுகளின் சிறப்பியல்பு அம்சம் கொம்பைப் போன்றது. இனப்பெருக்க காலத்தில் தனித்துவமான கொம்பு போன்ற தாடைகளைப் பயன்படுத்தி இனச்சேர்க்கை செய்யும் வாய்ப்பிற்காக ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன.