சிங்கப்பூரில் நெருக்கடி: கோத்தபய ராஜபக்ச அடுத்து செல்லப்போகும் நாடு?


கோத்தபய ராஜபக்ச.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தற்காலிகமாக தாய்லாந்தில் தங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் கடுமையாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கடந்த மாதம் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். மாலத்தீவிலும் கோத்தபயவுக்கு எதிர்ப்பு வலுத்த காரணத்தால் ஒரு சில நாட்களில் அங்கிருந்து தப்பி சிங்கப்பூருக்கு சென்றார்.

சிங்கப்பூரில் சில வாரங்களாக தங்கியிருந்த கோத்தபயவின் விசா காலம் முடிவடைவதால், வேறு சில நாடுகளில் தங்குவதற்காக அவர் தஞ்சம் கோரியிருந்தார். இந்த நிலையில் தாய்லாந்தில் கோத்தபய தற்காலிகமாக தங்க மனிதாபிமான அடிப்படையில் அனுமதியளிப்பதாக அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஒச்சா தெரிவித்துள்ளார். ஆனால் தங்கள் நாட்டில் தங்கியபடி அவர் அரசியல் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

x