சீனாவில் கோரத்தாண்டவம் ஆடிய மணல் புயல்: வெளியான அதிர்ச்சி வீடியோக்கள்!


சீனாவின் வடமேற்கு பகுதியில் கடந்த வாரம் வீசிய ராட்சத மணல் புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. தற்போது இந்த மணல் புயல் காட்சியின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள கிங்காய் மாகாணத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை சக்திவாய்ந்த மணல் புயல் வீசியது. பாலைவன நிலப்பரப்பில் வீசிய மணல் புயல் காரணமாக மணல் அலைபோல எழுந்து வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த மணல் புயல் சுமார் நான்கு மணி நேரம் நீடித்ததாகவும், ஹைக்ஸி மங்கோல் மற்றும் திபெத்திய தன்னாட்சி மாகாணம் ஆகியவை இந்த மணல் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் சீனா அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மணல் புயல் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கிங்காய் மாகாணத்தின் சில நகரங்களில் 200 மீட்டர் உயரத்துக்கு மணல் புயல் வீசியுள்ளது.

இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே சீனாவிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. ஜூன் மாதத்திலிருந்து, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பெரும் பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் இன்னும் சில நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x