‘உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் ஷின்ஸோ அபே’ - பிரதமர் மோடி வேதனை!


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

நாரா நகரில் இன்று காலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அபேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ எனது அருமை நண்பர் ஷின்ஸோ அபே மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

x